உலக அளவில் கோடை வெப்பத்துக்குப் பலியானவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் இந்த ஆண்டு கோடை வெப்பத்துக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2005 என்று தெரிய வருகிறது. இதற்கு முன்னர் 1998ம் ஆண்டில்தான் இந்தியாவில் கோடை வெப்பத்துக்கு அதிகம் பேர் பலியாகினர் என்றும், அப்போது 2 ஆயிரத்து 541 பேர் கோடை வெப்பத்துக்குப் பலியாகினர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 2010ம் ஆண்டு ரஷ்யாவில் 53 ஆயிரத்து 836 பேர் பலியாகினர் என்றும், 2006 ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் 3 ஆயிரத்து 418 பேர் கோடை வெப்பத்துக்குப் பலியாகினர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 2002ம் ஆண்டில் 1030 பேரும், 2003ம் ஆண்டில் 1210 பேரும் பலியாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ள அந்த புள்ளிவிவரக் கணக்குப்படி உலக அளவில் வெப்பத்துக்குப் பலியாகுபவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 Responses to கோடை வெப்பத்துக்கு பலியானவர்களின் எண்ணிகையில் இந்தியா 4வது இடத்தில்