சவுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட குமரி மீனவரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சவூதி அரேபியாவின் தனியார் மீன்பிடி நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் மதிவளன். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீன் பிடித்துக் கொண்டிருக்கையில், கடற்கொள்ளையர் என்று எண்ணி தவறாக சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் பணி புரிந்த தனியார் நிறுவனத்தில் மதிவளனுக்கு வரவேண்டிய பணத்தையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மதிவளன் குடும்பத்துக்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதோடு, அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.

0 Responses to சவுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட குமரி மீனவரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை: முதல்வர் ஜெயலலிதா கடிதம்