புலம்பெயர் தமிழர்கள் எவரும் நினைப்பது போல் பயங்கரவாதிகளோ அல்லது கொம்பு முளைத்த பிசாசுகளோ அல்ல. அவர்கள் இந்த நாட்டின் மக்களே என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்களை புறந்தள்ள அரசாங்கம் தயாரில்லை. அவர்களின் பங்களிப்புக்களை நாட்டின் அபிவிருத்திக்குப் பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் வெளிவிவகார அமைச்சர் நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு புலம்பெயர் தமிழர்களுடன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தொடர்புகள் பற்றி முன்வைத்த விதந்துரைகளுக்கு அமையவே புதிய அரசாங்கம் செயற்படுவதாகவும், அதற்கிணங்கவே தாம் உலக தமிழர் பேரவையுடன் இலண்டனில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகள் சந்திப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தமிழர்கள் மீது கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் விதித்த தடைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. அப்போது தேர்தலை நோக்காகக் கொண்டே பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதால், அதில் உண்மையற்ற பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று முன்தினம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இலண்டனில் உலக தமிழர் பேரவையுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தொடர்பில் சபையில் கேள்வி எழுப்பியதுடன் அந்த பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம் பற்றி சபையில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் நேற்று மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
மங்கள சமரவீர தன்னுடைய பதிலில், “இலண்டன் சந்திப்பின் போது விடுதலைப் புலிகள் மீதான தடைகளை நீக்குவது தொடர்பிலோ போர்க்குற்றம் தொடர்பான உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பிலோ. அரசியல் தீர்வு பற்றியோ இங்கு பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.
ஐக்கிய இலங்கையில் இறைமை, ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாத்துச் செயற்படுவது தொடர்பாகவே கவனம் செலுத்தப்பட்டது. நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானத் தூதுவர் எரிக் சோல்ஹெய்ம், இந்த சந்திப்பில் இரு மணித்தியாலயங்களே கலந்துகொண்டார்.
அவர்கள் இலங்கை தொடர்பாகவும் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாகவும் தமது அனுபவங்களை இதன்போது வெளிப்படுத்தினார். இதில் கலந்துகொண்ட தென்னாபிரிக்க பிரதிநிதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்புக்களில் ஈடுபட்டனர். அவரும் இங்கு தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்தல் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியவை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் மாத்திரம் ஒன்றரை மில்லியன் பேர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இவர்களில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்களென அனைத்து சமூகத்தினரும் உள்ளடக்கப்படுகின்றனர். இங்கையிலிருந்து மட்டுமன்றி அயர்லாந்து கிரேக்கம் போன்ற புலம்பெயர்ந்தவர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் தமிழர்கள் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் கொம்புமுளைத்த பிசாசுகளுமல்ல. சிவப்புக்குள்ளர்களுமல்லர். இவர்களில் மிகத் திறமை வாய்ந்தவர்கள் உள்ளனர்.
எழுத்தாளர்கள். கலைஞர்கள், வங்கியாளர்கள். வர்த்தகர்கள். மருத்துவர்கள், நிதி வணிகத்துறை நிபுணர்கள், சமையல் கலை நிபுணர்கள் என உலக நாடுகளுக்கே சவால்விடும் சாதனையாளர்களுமுள்ளனர்.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்கள். நாசா போன்ற நிறுவனங்களில் முதல்தர விஞ்ஞானிகளாக பத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் உள்ளனர். கடந்த பல வருடங்களுக்கு முன்னர் மாரவிலவில் தையல் கடை வைத்திருந்த ஒருவர் இன்று பிரான்ஸில் 12 மாடிக் கட்டடத்திற்கான உரிமையாளராகவுள்ளார். ஆடை வடிவமைப்பில் தேர்ந்து விளக்குகின்றார்.
புலம்பெயர் தமிழர்களில் சிலர் அடிப்படைவாதிகளாக உள்ளனர். அவர்களே தீவிர போக்குடையவர்களாகவுள்ளனர். எனினும் பெரும்பாலானோர் பிளவுபடாத இலங்கையில் இறைமை ஐக்கியம் ஆட்புல ஒருமைப்பாடு பேணப்பட வேண்டும் என்பதை விரும்புபவர்கள்.
இந்த வகையில் புலம்பெயர் சமூகத்தையோ புலம்பெயர் தமிழர்களையோ ஒதுக்கி வைக்க நாம் தயாரில்லை. நாம் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்திற்காக அவர்களுடன் பேச்சு நடத்துகின்றோம்.
நான் புலம்பெயர் சமூகத்தினரை பலமுறை சந்தித்துள்ளேன் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் அல்ல. அத்தகைய சிந்தனைகள் களையப்பட்டு நாம் புதிதாக சிந்திப்பது தவறில்லை.
புத்தபெருமான் போதித்த வழியில் நாம் பயணிப்பதா அல்லது பழிக்குப் பழி என்று சிந்திப்பதை விடுத்து ஐக்கியம் பற்றி சிந்திப்பது தவறா?
கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை செய்யத் தயாரில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஒதுக்கிவிட்டு புலம்பெயர் சமூகத்தை விரோதமாக நோக்கியமையே பல விளைவுகளுக்குக் காரணமாகியது.
நாம் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றோம். புலம்பெயர் சமூகங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் காலம் உருவாகியுள்ளது. சர்வதேசத்தின் முன்னிலையில் இலங்கையும் மக்களும் தலைநிமிர்ந்து நிற்கும் காலம் கனிந்துள்ளது.
புலம்பெயர் சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ள மாற்றத்தை உலக தமிழ் புலம்பெயர் சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ள மாற்றத்தை உலக தமிழர் பேரவை தலைவர் வண பிதா இம்மானுவேல் அவர்கள் சமர்ப்பித்த அறிக்கை தெளிவாக உணர்த்துகிறது.
சில தரப்பினர் தமிழர்களுக்கு எதிரான கூற்றை முன்வைத்துள்ள போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து பிரச்சினைக்கான அடிப்படையை இனங்கண்டு சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதேவேளை இலங்கையை பிளவுபடாத ஒன்றிணைந்த நாடாகவே புலம்பெயர் தமிழர்கள் நோக்குவதாகவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இவற்றைக் கருத்திற் கொண்டு எதிர்க் கட்சியினரும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர்; அவர்களை புறந்தள்ள முடியாது: மங்கள சமரவீர