மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவோம் எனும் தொனிப்பொருளில் மாத்தறையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் கலந்து கொண்டதாக கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் வருகை தந்திருந்தார். எனினும், அவர் பிரதான மேடையில் ஏறாமல் அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து கையசைத்துவிட்டு சென்றுவிட்டார்.
மேற்படி கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் அழைப்பிதழை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார் என்று தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, மஹிந்த ராஜபக்ஷ அனுப்பிவைத்த அறிக்கையை வாசித்தார்.
மஹிந்தவுக்கு ஆதரவான இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், டலஸ் அழகப்பெரும, சரத் வீரசேகர, ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்த்தன, சீ.பி.ரத்நாயக்க, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்த்தன, பவித்ரா வன்னியாராச்சி, சாலித திஸநாயக்க, மனுஷ நாணயக்கார, மஹித யாப்பா அபேவர்த்தன, எஸ்.எம்.சந்திரசேன, காமினி லொக்குகமகே, திஸ்ஸ கரலியத்த, உதித்த லொக்கு பண்டார, தேனுக விதானகமகே, சந்திரசிறி கஜதீர, சரண குணவர்த்தன, லக்ஷ்மன் வசந்த பெரேரா, டி.பி.ஏக்கநாயக்க, இந்திக பண்டாரநாயக்க, மாலினி பொன்சேகா, ஜானக வத்குபுர, நிஷாந்த முத்துஹெட்டிகம, சந்திம வீரக்கொடி, சரத்குமார குணரத்ன, பிரியங்கர ஜயரத்ன, குமார வெல்கம உள்ளிட்ட 76 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர் என்று மேற்படி கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

0 Responses to மஹிந்தவைப் பிரதமராக்க வலியுறுத்திய மாத்தறைக் கூட்டத்தில் 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு!