Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் அத்துமீறி முன்னெடுக்கப்பட்டு வந்த விகாரை அமைக்கும் பணி நேற்று வெள்ளிக்கிழமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

காணிப் பிணக்குகளை தீர்க்கும் பொருட்டு நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்ற காணி அமைச்சின் உயர் அதிகாரிகளின் நடமாடும் சேவையிலேயே மேற்படி முடிவு எட்டப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய இரண்டு வருடங்களில் காணிப் பிணக்குகள் தீர்க்கப்படவேண்டும். இதன் அடிப்படையில் பிரதேச செயலாளர் மாகாணக் காணி ஆணையாளர் போன்ற அதிகாரிகளால் தீர்க்கப்படாத முல்லைத்தீவு மாவட்ட காணிப்பிணக்குகளை தீர்த்து வைப்பதற்காக காணி ஆணையாளர் நாயகம் உட்பட காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், காணி அமைச்சு என்பவற்றை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்ட நடமாடும் சேவை முல்லைத்தீவில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொக்கிளாய் மக்களின் குடியிருப்பு காணிகளில் அத்துமீறி விஹாரை அமைத்துவரும் பிணக்கானது முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இந்தக் காணிக்கு சரியான தீர்வு எட்டப்படும் வரை அவ் விகாரையின் கட்டுமானப்பணிகள் உடனடியாக இடைநிறுத்தப்படுவதற்குரிய நடவடிக்கையை எடுக்குமாறு முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி விபரங்கள் காணி உரிமையாளர்களால் தனக்கு தெரிவிக்கப்பட்டன.” என்றுள்ளார்.

0 Responses to முல்லைத்தீவு கொக்கிளாயில் விகாரை அமைக்கும் பணி இடைநிறுத்தம்: து.ரவிகரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com