காஞ்சீபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பாலவாக்கம் சோமுவின் மகளும், ஊராட்சி மன்ற தலைவியுமான டாக்டர் தமிழரசி-ஐகோர்ட்டு வக்கீல் பரமசிவதாஸ் திருமணம் நீலாங்கரையில் இன்று நடைபெற்றது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
அப்போது அவர், ‘’லட்சக்கணக்கான மக்கள் பார்த்து வியக்கும் அளவுக்கு கடற்கரை சாலையில் கடந்த 3 நாட்களாக எங்கு பார்த்தாலும் கொடி தோரணங்களுடன் பாலவாக்கம் சோமு நகரை அலங்கரித்து உள்ளார்.
ம.தி.மு.க. வீழ்ந்து விட வில்லை. இது ஆயிரங்காலத்து பயிர் என்பதை பறை சாற்றுவதாக இது அமைந்துள்ளது. அண்ணா புகழ் இருக்கிற வரை ம.தி.மு.க. இருக்கும். இது நெருப்பின் மடியில் பிறந்த இயக்கம். இந்த இயக்கத்தை யாரும் அழிக்க முடியாது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் மாவட்ட செயலாளர் சோமு தனது இல்ல திருமண விழாவை மாநாடு போல் நடத்தி காட்டியிருக்கிறார்.
பல கட்சியை சேர்ந்தவர்கள் இந்த திருமணத்துக்கு வந்து மணமக்களை வாழ்த்தி சென்றுள்ளனர். பாலவாக்கம் சோமு ம.தி. மு.க.வுக்கு கிடைத்திருக்கிற சொத்து ம.தி.மு.க.வுக்கு எத்தனையோ சோதனைகள் சூழ்ந்துள்ள நிலையிலும் கட்சி எப்படி கட்டுக்கோப்பாக உள்ளது என்பதை நிரூபித்துக்காட்டி இருக்கிறார்.
சிலர் கட்சியை விட்டு விலகிச்சென்ற வேளையிலும் கழகத்தை கட்டிக்காத்து வருகிறார். 1989-ம் ஆண்டு வன்னி பகுதிக்கு நான் சென்று திரும்பிய நேரம் என் வீட்டுக்கு தனது கைக்குழந்தையுடன் சோமு வந்திருந்தார். குழந்தைக்கு பெயர் சூட்டும்படி வேண்டினார்.
பிரபாகரன் என்று அந்தகுழந்தைக்கு பெயர் சூட்டினேன். கட்சி மீது அதிக ஈடுபாடு உடையவர் சோமு. அவர் மகள் தமிழரசி டாக்டராகவும், ஊராட்சி மன்ற தலைவியாகவும் இருக்கிறார்.
இலங்கை போரில்காயம் அடைந்த தமிழ் இனத்துக்கு மருத்துவ சிகிச்சை செய்ய செல்கிறேன் என்று அறிவித்தவர் தமிழரசி. அந்த அளவுக்கு இவரிடமும் தமிழ் உணர்வு அதிகமாக உள்ளது’’என்று பேசினார்.
வன்னிப்பகுதிக்கு சென்று திரும்பிய நேரத்தில் அந்தகுழந்தைக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டினேன்:வைகோ பேச்சு
பதிந்தவர்:
தம்பியன்
06 September 2009
0 Responses to வன்னிப்பகுதிக்கு சென்று திரும்பிய நேரத்தில் அந்தகுழந்தைக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டினேன்:வைகோ பேச்சு