பெரும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான நிதியமொன்றை வடக்கு மாகாண சபை நேற்று ஞாயிற்றுக்கிழமை உருவாக்கியுள்ளது.
குறித்த நிதியத்திற்கான உதவிகளை வழங்குமாறு உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான நிதியம் ஒன்றை அமைப்பதற்கான கூட்டம் வடக்கு மாகாண சபையில் அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கு பற்றியிருந்தனர்.
இதன் போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபங்களை தெரிவித்த அவைத் தலைவர், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தமிழக மக்கள் வழங்கிய அளப்பரிய உதவிகளையும் தியாகங்களையும் நினைவு கூர்ந்தார். அத்தகைய தியாகங்களுக்கும் ஒத்துழைப்புக்களுக்கும் நன்றிக்கடனாக இந்த உதவியை நாம் செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, குறித்த நிதியம் தொடங்கப்பட்டதுடன், நிதியத்திற்கான வங்கி கணக்கு இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் எனவும் இதற்கு உதவிகளை வழங்குவோர் தொடர்பான தகவல்கள் வெளிப்படையாக பேணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to தமிழகத்துக்கான வெள்ள நிவாரண நிதியமொன்றை வடக்கு மாகாண சபை உருவாக்கியுள்ளது