Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களின் மீது எந்தவித நம்பிக்கையுமின்றி போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் இராணுவத்தினரை தொடர்ந்தும் வைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சிகளை எடுக்குமாயின்; மற்றொரு பிரபாகரன் அவதாரம் எடுத்தால் அப்போது யாரையும் குற்றஞ்சாட்ட முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சமஷ்டிக் கோரிக்கை என்பது பிரிவினைக்கான கோரிக்கை அல்ல. தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக நோக்கும் போது சிதைவுகளைக் கொண்டிருக்கும் கட்டடமொன்றை மீளமைப்பது நினைவுக்கு வருகின்றது. ஒரு கட்டடமொன்றில் தவறான திட்டங்கள், கட்டமைப்பு ரீதியான கோளாறுகள், சுரண்டல்கள், இயற்கையான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் சிதைவுகள் ஏற்பட்டிருக்கலாம். அதேபோன்ற தேசத்தைக் கட்டியெழுப்புதலையும் நோக்க வேண்டியுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to தலைவர் பிரபாகரன் மறு அவதாரம் எடுத்தால் எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com