நல்லாட்சி முத்திரையை சூடிக்கொண்டு மைத்திரி- ரணில் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பகல் கொள்கையில் ஈடுபட்டு வருவதாக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) குற்றஞ்சாட்டியுள்ளது.
திருடர் பட்டம் சூட்டப்பட்டுள்ள தங்கள் (கூட்டு எதிரணி) மீதான குற்றச்சாட்டுக்கள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றும் அந்த அணி குறிப்பிட்டுள்ளது.
கோப் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அதற்குத் துணைசென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பில் நாட்டு மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.
கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முதலில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் நியமனமானது அரசியல் யாப்பு சபையின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது. அவர் முறையாக பதவியேற்கவில்லை. இது நடைமுறை யாப்பிற்கு எதிரானது. இது திட்டமிடப்பட்ட ஒரு கொள்ளைச் சம்பவம். இதில் சந்தேகம் இல்லை. இது தவறுதலாகவோ தெரியாமலோ நடந்த விடயமல்ல.
ஜனவரி 08ஆம் திகதி ஜனாதிபதி பதவியேற்கின்றார், 09ஆம் திகதி பிரதமர் பதவியேற்கின்றார். ஒருசில தினங்களில் மத்திய வங்கி பிரதமரின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. இந்த நாட்டின் பிரஜையல்லாதவர் ஆளுநராக பதவியேற்கின்றார். நல்லாட்சி அரசாங்கம் தற்போது நான்முனை சந்தியில் ஆடையின்றி நிற்கின்றது. நல்லாட்சி லேபலை ஒட்டிக்கொண்டுதான் ஊழலில் ஈடுபட்டனர். கடந்த 40 வருட அரசியல் வாழ்வில் இரண்டு விடயங்கள ஊடாகவே பயணிக்கின்றார்.
ஒன்று பொருளாதாரத்தை மிகவிரைவாக அபிவிருத்தி செய்வதாக கூறுவார். மூன்று முறை பிரதமரானார் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியும். இரண்டாவது காரணம் கொலைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்தது. எனினும் அவர் ஒரு நாளும் ஊழலில் ஈடுபடமாட்டார் என நீங்கள் தெரிவிக்கலாம். எனினும் இந்த மிகப்பெரிய கொள்ளையுடன் மக்கள் ஒரு தீர்மானத்திற்கு வர முடியும். இது தவறுதலாக நடந்த விடயமல்ல. நாங்கள் கொள்ளையர்கள் என தொடர்ச்சியாக கூறி வருகின்றார்.
எனினும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எனினும் அவருடன் இணைந்திருக்கும் அர்ஜுன மகேந்திரன் கொள்ளையில் ஈடுபட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. ஆகவே இது தொடர்பில் மேலும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய கொள்ளையே இது.” என்றுள்ளார்.

0 Responses to நல்லாட்சி முத்திரையுடன் மைத்திரி - ரணில் அரசாங்கம் திருடிக்கொண்டிருக்கின்றது: கூட்டு எதிரணி