சிலரது பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் புத்த பெருமானின் சிலைகள் ஆக்கிரமிப்பின் அடையாளமாக நோக்கப்படுவதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டிபி) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாட்டில் எந்தவொரு இடத்திலும் புத்தர் சிலையை வைப்பதற்கோ அல்லது அதனை வழிபடுவதற்கோ முழுமையான உரிமை உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். எனினும், பௌத்த மதத்தை வழிபடும் மக்கள் இல்லாத பகுதிகளில் அச்சுறுத்தும் வகையில் புத்தர் சிலைகளை வைப்பதே முரண்பாட்டு நிலைமையை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பௌத்தவிவகார அமைச்சு, தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு மற்றும் சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சுக்கள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சிலரது செயற்பாடுகளால் புத்தர் சிலைகள் ஆக்கிரமிப்பின் அடையாளமாக மாறிவிட்டன: டக்ளஸ் தேவானந்தா