நவம்பரில் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் இறுதிக் கட்டத்தில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற ரஷ்யாவின் உதவி கிடைத்ததாக அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையான CIA இன் அறிக்கை ஒன்றை சுட்டிக் காட்டி வெள்ளிக்கிழமை தி வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தி அமெரிக்க அதிபர் தேர்தல் குழுவைத் திணற வைத்துள்ளது. CIA இன் இந்த அறிக்கைக்குப் பதில் அளித்துள்ள டிரம்பின் நிர்வாகக் குழு இதே நபர்கள் தான் சதாம் ஹுஸ்ஸைன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்தார் என்று பொய்யுரைத்தவர்கள் என்றும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்தத் தேர்தலின் முடிவின் பிரகாரம் அமெரிக்காவுக்கு மேலுக் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டிய நேரமிது என்றும் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது ரஷ்யாவின் தலையீடு குறித்து அமெரிக்க காங்கிரஸில் முறைப்பாடு எழுந்ததை அடுத்து இவ்வருடத்தின் தேர்தல் பிரச்சார சமயத்தில் இடம்பெற்ற சைபர் தாக்குதல்கள் குறித்து ஆய்வு செய்து தகவல் அளிக்குமாறு அதிபர் ஒபாமா உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவு வெளியானதை அடுத்தே தி வாஷிங்டன் போஸ்ட் CIA இன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
திவாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான செய்தியின் பிரகாரம் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிங்டன் மற்றும் அவரது பிரச்சாரக் குழுக்களது ஜனநாயகத் தேசியக் கமிட்டியின் ஈ மெயில்களை மாஸ்கோவுடன் தொடர்புடைய சில தனிப்பட்ட நபர்களே ஹேக் செய்து விக்கிலீக்ஸ் இணையத் தளத்துக்கு வழங்கியதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தேர்தலுக்கு சில மாதங்கள் இருப்பதற்கு முன்பே திட்டமிடப்பட்டு இந்த ஈ மெயில் விவகாரம் வெளியிடப் பட்டதால் தான் ஹிலாரியின் செல்வாக்கு சரிந்து பெருமளவான வாக்குகளை அவர் இழந்து தேர்தலில் தோல்வியுற நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஷ்யாவின் இலக்காக டிரம்பை வெற்றி பெறச் செய்வது என்பது மாத்திரமே இருந்ததாக தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. ஆனால் விக்கிலீக்ஸ் தாபரான ஜூலியன் அசாஞ்சே ரஷ்யாவுடனான தொடர்பை மறுத்துள்ளார்.

0 Responses to அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதிக் கட்டத்தில் டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவியதா? - திடுக்கிடும் தகவல்கள்