தமிழக அரசின் ஆய்வுக் கூட்டம் நீன்ட நாள்களுக்கு பிறகு இன்று முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைப்பெற்றது.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவியேற்று 100 நாள்களை
கடந்து விட்டது. இதில் அநேக பொதுமக்களும் எதிர் கட்சிகளும் வைக்கும்
குற்றச்சாட்டு, தமிழக அரசின் நிர்வாகம் சரியாக நடைபெறுவதில்லை என்பதே.
அண்மையில் எடப்பாடி பழனிசாமி 1570 கோப்புகளில் கையெழுத்திட்டதாக
கூறப்பட்டதை விமர்சித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
ஒன்றை வெளியிட்டார். அதில்
அதிமுகவின் நிர்வாகம் முடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்நிலையில்
இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தலைமை
செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார்,
செல்லூர் ராஜூ, எம்.சி.சம்பத் ஆகியோர் கலந்துக் கொண்டனர். மேலும்
க.சண்முகம், பங்கஜ் குமார் பன்சல் உள்ளிட்ட உயர் அலுவலர்களும் இந்த
ஆய்வுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு
முயற்சிகள் துறை செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டுள்ளது.

0 Responses to நீண்ட நாள்களுக்குப் பிறகு முதல்வர் பழனிசாமி நடத்திய ஆய்வுக் கூட்டம்