Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலம் அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் தீர்மானத்தினை முழுமையாக அமுல்படுத்துவதை காலதாமதப் படுத்துவதோ அல்லது மறுப்பதோ நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தீர்மானத்தில் உள்ளடங்கிய விடயங்களை முழுமையாக அமுல்படுத்துவதே நாட்டை முன்னோக்கி நகர்த்திச் செல்வதற்கான முதற்படியாக இருக்கும். இராணுவ வீரர்கள் என்ற போர்வையில் ஒருசிலரால் மேற்கொள்ளப்பட்ட மனித நேயத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் மூடிமறைக்கப்படக்கூடாது. இதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும்போதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to ஐ.நா.விடம் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் விரைவாக நிறைவேற்ற வேண்டும்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com