Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண சபைக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் யாரும் செயற்பட வேண்டாம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. அங்கு, வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் கூறியுள்ளதாவது, “வடக்கு மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படும் வகையில் வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளும், உறுப்பினர்களின் நடவடிக்கைகளும் அமையக் கூடாது. பல்வேறு அா்ப்பணிப்புக்களினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைக்கு களங்கம் ஏற்படும் வகையில் யாரும் செயற்பட வேண்டாம்.

வடக்கு மாகாண சபையின் கௌரவத்தினைப் பாதுகாக்கும் பொறுப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் இருக்கின்றது. எந்தவொரு விவாதமும் தனிப்பட்ட ரீதியாக எவரையும் தாக்குவதாகவும் இருக்க கூடாது.

அத்துடன், ஒருவிடயம் நடந்ததா இல்லையா என்பதை அறிவதே இந்த விசாரணை அறிக்கையின் நோக்கம். தனிப்பட்ட ரீதியில் எவரையும் தாக்குவதையும் மனதைப் புண்படுத்துவதையும் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

சபை உறுப்பினர்களின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் அறிக்கையின் பிரதியை சபைக்கு சமர்ப்பிக்கின்றேன். அந்தரங்கமான அறிக்கையினை ஊரைக் கூட்டி ஊடகங்களிடம் கையளித்தால் அது வடக்கு மாகாண சபைக்கு இழுக்கினை ஏற்படுத்தும்.

குறித்த அறிக்கையில் பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் அறிக்கையினைப் பெற்றவுடன், தங்களது விளக்கங்களை எழுத்து மூலம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கொடுக்கப்படும் விளக்கங்கள் மற்றும் விசாரணை அறிக்கையின் பிரதிகள் என்பன சகல உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு, அதன் மீதான விவாதம் எதிர்வரும் 09ஆம் திகதி நடத்தப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

எனினும், அமைச்சர்களின் விளக்கங்களுடனான விசேட அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறும் என்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண சபைக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம்; விசாரணை அறிக்கையை முன்வைத்து விக்னேஸ்வரன் உரை!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com