அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் அரசியல் களத்தில் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துள்ள நிலையில், இதுவரை பிரிந்து நின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியோடு இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை, பன்னீர்செல்வம் அணியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருக்கின்றார்.
முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின்பு அதிமுகவில் பல குழப்பங்கள் நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி தினகரன் அணி, பன்னீர் அணி, எடப்பாடி அணி என 3 அணிகளாக அதிமுக செயல்பட்டு வருகிறது. தினகரன் அணிக்கு இதுவரை 27 சட்டப்பேரவை உறுப்பினர்களும், எடப்பாடி அணிக்கு 95 சட்டப்பேரவை உறுப்பினர்களும், பன்னீர் அணிக்கு 12 சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஆதரவளித்துள்ளனர்.
இதற்கிடையில் வரும் 14ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் நடக்கவிருக்கிறது. இந்த கூட்டத்தின் போது பெரும்பான்மை குறித்த விவகாரம் பூதாகரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பன்னீர் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் டுவிட்டரில் சிலர் பதிவிட்டிருந்த ‛‛தினகரனின் ஆதரவாளர்களாக இருந்தாலும் ஆட்சியை கவிழ்க்க எந்த முயற்சியையும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மேற்கொள்ள மாட்டார்கள்'', ”ஆட்சிக்கு பங்கம் வந்தால் பாண்டியராஜன் உள்ளிட்ட பன்னீர்செல்வம் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட இவர்கள் பக்கம் வாக்களிப்பார்கள்.'' போன்ற டுவிட்களை ரீடுவிட் செய்திருந்தார்.

0 Responses to தினகரன் வருகையால் எடப்பாடி அணி, பன்னீர் அணிக்கு ஆதரவு: அதிமுக அடிதடி!