Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரப் பீடங்களுக்கு அனுப்பி அரசு விரைவாக உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“அத்துடன், கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல் மோசடிகள், பொதுச் சொத்துகள் துஷ்பிரயோகம் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவேண்டும். இதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் உண்மையின் பக்கம் நிற்கும்'' என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஆணைக்குழுவின் பரிந்துரைகளைக் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், பெர்ப்பச்சுவல் நிறுவனத்தின் அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிஹேன மற்றும் பொறுப்புக் கூறவேண்டிய அனைவருக்கும் எதிராகக் குற்றவியல் சிவில் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டமைக்கு இணங்க நடவடிக்கைகள் எடுப்பதற்குரிய அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளேன் என்று நேற்றுமுன்தினம் புதன்கிழமை அறிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பிணை முறி மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் சம்பந்தன் வலியுறுத்தல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com