Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“சுய கெளரவம் மற்றும் சமத்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியலமைப்பினூடு சமாதானமான ஒரு தீர்வையே எதிர்பார்க்கிறோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகைதந்த தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ ஷாவுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தத்தினால் இலங்கை பாரிய முன்னேற்றங்களை அடைய முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய இரா. சம்பந்தன், 70 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தேசிய பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதையும் தாய்லாந்து பிரதமரிடம் எடுத்துக்கூறியுள்ளார்.

இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “சுய கெளரவம் மற்றும் சமத்துவம் அடிப்படையிலான ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக சமாதானமான ஒரு தீர்வையே நாம் எதிர்பார்க்கிறோம். அத்தகைய ஒர் அரசியல் அதிகாரப்பகிர்வை கொண்டுவருவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்பை வழங்குவோம். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை புத்த பெருமானின் போதனைகளின் பிரகாரம் நியாயமானதாய் சரியாக செய்வதன் மூலம் அடைந்து கொள்ளலாம்.” என்றுள்ளார்.

0 Responses to சுய கௌரவம், சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வை எதிர்பார்க்கின்றோம்: சம்பந்தன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com