Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விழுப்புரம் மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ,

ஈழப்போர் மீண்டும் வெடிக்கும். பிரபாகரன் இறந்துவிடவில்லை; உயிருடன் உள்ளார். ராமாயணத்தில் இந்திரஜித் தன் மீது பாய்ந்த அம்பைப் பிடுங்கி போர் தொடுத்ததாக கம்பன் கூறுவான். அதற்கு இணையான வீரர் பிரபாகரன்.

தமிழ் ஈழத்தையும், விடுதலைப் புலிகளையும் நாங்கள் என்றைக்கும் ஆதரிப்போம். இதில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கையில் கடைசி தமிழன் இருக்கும் வரை, மானமுள்ள தமிழர்கள் இருக்கும் வரை ஈழப்போர் ஓயாது. இலங்கையில் தமிழர்களுக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம் மட்டுமே.

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவினர் நான் போட்டியிட்ட தொகுதியில் நன்றாகத் தேர்தல் பணியாற்றினர். பண பலத்தால் நாம் தோற்கடிக்கப்பட்டோம் என்றார்.

0 Responses to பிரபாகரன் இறந்துவிடவில்லை; உயிருடன் உள்ளார்: வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com