இத் தேர்தல் மற்றும் வாக்களிப்பு ஏற்பாடுகள் தொடர்பாகப் பின்வரும் தகவல்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான ஜேர்மனி செயற்பாட்டுக்குழு மக்களுக்கு அறியத் தருகிறது.
தேர்தல் தொகுதி 1: Berlin, Brandenburg, Mecklenburg-Vorpommern, Sachsen-Anhalt, Sachsen,
Thüringen - 1பிரதிநிதி – போட்டியிடும் வேட்பாளர்கள்: 2
ஒரு வேட்பாளருக்கு மட்டுமே வாக்காளர் வாக்களிக்கலாம். மீறின் வாக்குச்சீட்டுச் செல்லாது.
தேர்தல் நடக்கும் நாள்: 02.05.2010 ஞாயிற்றுக்கிழமை
வாக்களிப்பு நேரம்: 08:00 மணியில் இருந்து 18:00 மணி வரை
வாக்களிப்பு நிலையம்;:
Wassertorstr. 48, 10969 Berlin
(U1- Prinzen Strasse)
தேர்தல் தொகுதி 2: Bremen, Hamburg, Niedersachsen, Schleswig-Holstein
2 பிரதிநிதிகள் - போட்டியிடும் வேட்பாளர்கள்: 2
இரண்டு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவேண்டிய வடக்கு ஜேர்மனி தேர்தல் தொகுதியில் இரண்டு பேரே வேட்பாளர்களாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளமையால் இத் தேர்தல் தொகுதியில் தேர்தல் இடம் பெற மாட்டாது.
தேர்தல் தொகுதி 3: மத்திய ஜேர்மனி: Nordrhein-Westfalen (தமிழ் மக்கள் மிகவும் செறிந்து வாழும் இடம்) - 4 பிரதிநிதிகள் - போட்டியிடும் வேட்பாளர்கள்: 7
வாக்காளர் ஆகக் கூடியது நான்கு வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்கலாம். மீறின் வாக்குச்சீட்டுச் செல்லாது.
தேர்தல் நடக்கும் நாள்: 16.05.2010 ஞாயிற்றுக்கிழமை
வாக்களிப்பு நிலையங்களின் விபரங்கள் 13.05.2010 அன்று
வெளியிடப்படும்.
தேர்தல் தொகுதி 4: Baden-Württemberg, Bayern, Hessen, Rheinland-Pfalz, Saarland - 3 பிரதிநிதிகள் - போட்டியிடும் வேட்பாளர்கள்: 6
வாக்காளர் ஆகக் கூடியது மூன்று வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்கலாம். மீறின் வாக்குச்சீட்டுச் செல்லாது.
தேர்தல் நடக்கும் நாள்: 16.05.2010 ஞாயிற்றுக்கிழமை
வாக்களிப்பு நிலையங்களின் விபரங்கள் 13.05.2010 அன்று
வெளியிடப்படும்.
ஜேர்மனியில் போட்டியிடும் வேட்பாளர்கள்; விபரங்களை www.tgte-germany.de என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
வாக்காளருக்கான தகுதி
- நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்கான பிரதிநிதிகளினைத் தெரிவு செய்யும் தேர்தலில் வாக்களிக்க விரும்பும் ஒருவர் குறிப்பிட்ட தேர்தல் நடைபெறும் நாளன்று தனது வயதின் 17வது ஆண்டினைப் பூர்த்தி செய்திருப்பதோடு ஈழத் தமிழர் பண்பாட்டு வாழ்வோடு ப10ர்வீகம் திருமணம் தத்தெடுத்தல் ஊடாக இணைந்தவர்களாக இருக்க வேண்டும்.
- இத்தோடு தேர்தல் ஆணையத்தினரைத் திருப்திப்படுத்தக்கூடிய வகையில் தனது ஈழத்தமிழ் அடையாளத்தை நிறுவக்கூடியவரும் இதில் உள்ளடங்குவர். இவ் வகையினரின் தகுதி அவரவர் நிலைக்கேற்பத் தீர்மானிக்கப்படும்.
- வாக்காளர் ஜேர்மனியை வாழ்விடமாகக் கொண்டிருக்க வேண்டும். தான் வாழும் தேர்தல் தொகுதியில் மட்டுமே அவர் வாக்களிக்க முடியும்.
வாக்குச்சாவடியில் தன்னை அடையாளப்படுத்தக்கூடிய ஆவணங்கள்
ஜேர்மன் அடையாள அட்டை (Personal Ausweis)
ஜேர்மன் வதிவிட உரிமை அத்தாட்சியைக் கொண்ட இலங்கைக் கடவுச்சீட்டு
ஜேர்மன் வெளிநாட்டவர் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள வேறு ஆவணங்கள்
(deutscher Reisepass மற்றும் deutscher Führerschein ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது)
வாக்குச்சாவடியில் தனது வதிவிடத்தை அடையாளப்படுத்தக்கூடிய ஆவணங்கள்
வாக்களிக்கச் செல்லும் வாக்குச்சாவடியுள்ள தேர்தல் தொகுதியில் வாழும் முகவரியை அத்தாட்சிப்படுத்தும் ஏதாவது ஒரு ஆவணம்.
தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான மேலதிகத் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: infogermany@govtamileelam.org
வெளியீடு: அனைத்துலகச் செயலகம்
தொடர்புகளுக்கு: info@govtamileelam.org



0 Responses to ஜேர்மனியில் 4 தேர்தல் தொகுதிகளில் 17 பேர் போட்டி! மே 2 16 ஆகிய இரு தினங்களில் தேர்தல்!!