Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அரசிடம் கலைஞர் வேண்டுகோள்

பதிந்தவர்: தம்பியன் 17 September 2009

மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் நிவாரண உதவிகள் இலங்கையில் அகதிகளாக உள்ள தமிழர்களுக்கு எவ்வாறு பயன்பட இருக்கிறது என்ற விவரத்தை இலங்கையிடம் இருந்து பெற்று மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.

முதல் அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில்,

கேள்வி: இலங்கையில் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் குடிஅமர்த்த இலங்கைக்கு ஆஸ்திரேலியா பதினைந்து கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளதாக செய்தி வந்துள்ளதே?

பதில்: ஆம்; இத்தகவலை ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்திய அரசைப் பொறுத்தவரையில் 15 கோடி ரூபாய் அல்ல இலங்கைத் தமிழர்களின் புனர் வாழ்வுக்காக 500 கோடி ரூபாய் வழங்கும் என்றும் அறிவித்து, அத்துடன் தமிழகத்தின் சார்பில் ஏற்கனவே 25 கோடி ரூபாய்க்கு மேல் பெறுமானமுள்ள அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு, ரொக்கமாக 25 கோடி ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்திருக்கிறோம். இந்த உதவிகள் எவ்வாறு இலங்கையில் இன்னமும் அகதிகளாக உள்ள தமிழர்களுக்காகப் பயன்படுத்தப்பட இருக்கின்றது என்ற விவரங்களை இந்திய அரசு இலங்கை அரசிடமிருந்து பெற்று வெளியிட வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோம். இதுபற்றி நான் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவிலே கலந்து கொள்ள சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களிடமும் பேசியிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

நன்றி: நக்கீரன்

0 Responses to மத்திய அரசிடம் கலைஞர் வேண்டுகோள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com