Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் அணிதிரண்டு ஆயுதப் போராட்டத்தை தொடங்கக்கூடும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் M.K.நாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.




புதுடில்லியில் இடம்பெற்ற இந்திய காவல்துறை தலைமையதிகாரிகளுக்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்:-

"பெரும் படை நடவடிக்கையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வளமாக விளங்கும் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் பரந்து விரிந்து காணப்படுகின்றார்கள். எனவே அவர்களின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான நிதி வழங்கல்கள் எவ்விதமான சிதைவும் இன்றி அப்படியே உள்ளன. உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அணிதிரண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் கட்டியெழுப்பி ஆயுதமேந்தக்கூடும். இது தொடர்பாக நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்."

இவ்வாறு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: பதிவு

0 Responses to புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் அணிதிரண்டு ஆயுதப் போராட்டத்தை தொடங்கக்கூடும்! இந்தியா எச்சரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com