இருபத்தையாயிரம் இடம்பெயர்ந்த மாணவர்கள் கல்விப்பொது தராதர தேர்வு எழுதவுள்ளதாக சிறீலங்காவின் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் நாள் நடைபெறவுள்ள சாதாரணதர தேர்வுக்கு நாடு முழுவதும் 5 இலட்சத்தி 45 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். இவர்களுக்காக 4000 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
வடக்கில் சிறீலங்காப் படையினரின் போர் நடவடிக்கையால் இடம்பெயர்ந்த 25 ஆயிரம் மாணவர்கள் இத்தேர்வுக்கு தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டிற்காக மேல்மாகாணத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆசிரியர்கள் முழுமையான பாடத்திட்டததை கற்று கொடுக்கவில்லை என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.



0 Responses to 25000 இடம்பெயர்ந்த மாணவர்கள் க.பொ.த பரீட்சைக்கு தேர்ற்றவுள்ளனர்