Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊடக தடை போன்ற பல மனித உரிமை மீறல்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை தமது செயல்களால் பதில் சொல்ல வேண்டும் என்றும் வெறும் வார்த்தைகளால் அல்ல என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தனது அழுத்தத்தை இலங்கைக்குக் தொடர்ந்து கொடுத்துவருகிறது. தெற்காசிய தொடர்புகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவின் தலைவி திருமதி ஜீன் லம்பேர்ட் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐரோப்பிய பாராளுமன்றமானது ஜி.பி.எஸ் வரிச்சலுகையில் நேரடியாக தலையிட முடியாது. அது மொத்தமாக ஐரோப்பிய ஆணையத்தின் கைகளில் உள்ளது. ஆனால் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து கடந்த வாரம் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, ஜி.எஸ்.பி வரிச்சலுகை வழங்குவது குறித்த ஆய்வில் நிச்சயம் ஐரோப்பிய ஆணையம் கருத்தில் எடுத்துக் கொள்ளும் என்று ஜீன் லம்பேர்ட் தெளிவு படுத்தியுள்ளார்.

0 Responses to "எங்களுக்கு செயலே முக்கியம், வெறும் வார்த்தைகள் அல்ல" - ஐ.ஒ வலியுறுத்தல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com