Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு

ஆஸ்திரேலியக் கப்பலில், இந்தோனேஷியத் துறைமுகத்தில் உள்ள 78 இலங் கையர்களையும் இறக்குவதற்குப் பலத் தைப் பயன்படுத்தப் போவதில்லையென இந்தோனேஷியா தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியக் கப்பலில் உள்ள இலங்கையர்கள் அதிலிருந்து இறங்க மறுத்து வருகின்ற நிலையில் இந்தோனேஷியா வின் வெளிவிவகார அமைச்சர் மார்ட்டி நட்டலேகவா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்கள் ஏற்கனவே மிக நெருக்கடியான சூழ்நிலைகளைக் சந்தித்துள்ளனர். கடும் துயரங்களை சந்தித்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ள அவர், பலவந்தமான நடவடிக்கையின் மூலம் இந்த மக்களை இறக்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் கப்பலில் உள்ள அகதிகள் வெளியுலகத்துடன் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ளனர் என ஆஸ்திரேலியாவின் கிறீன் கட்சியின் செனட்டர் சரா ஹன்சன் யங் தெரிவித்துள்ளார். கப்பலில் உள்ளவர்களுக்கு என்ன நடைபெறுகின்றது எனத் தெரியவில்லை என்று ஆஸ்திரேலியா தெரிவிப்பதும் இந்தோனேஷியா சொல்வதும் முரணாக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஓசியானிக் வைகிங் கப்பலில் உள்ள 78 இலங்கையர்களும் தாங்கள் பலவந்தமாக இறக்கப்படலாம் என அஞ்சுகின்றனர் என அவர்களுடன் தொடர்புகொண்ட ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர் ஒருவர் தெரிவித்தனர்.

0 Responses to கப்பலில் இருக்கும் 78 இலங்கையர்களையும் இந்தோனேசியா பலவந்தமாக இறக்காது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com