Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழத்திற்கான போர் ஓய்ந்துவிடவில்லை மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் தலைமையில் போர் தொடங்கும்என்று ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்யவேண்டும்,

போர்க்குற்றம் செய்த ராஜபக்செவை சர்வதேச நீதிமன்றத்தின் முன்புநிறுத்தி ஐ.நா.சபை தண்டிக்கவேண்டும் என வலியுறுத்தி இராமேஸ்வரத்திலிருந்து பிரசார பயணத்தை தொடங்கிய வைகோ அங்கு கூறியிருந்த மக்களிடம் பேசியபோது..'' கடந்த ஆண்டு இந்தியாவிற்குள்ஊடுருவி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்தது.

அதே போலத்தான் இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்கு வந்து தமிழக மீனவர்கள்மீது தாக்குதல் நடத்திவருகின்றனர். ஆனால் இலங்கை விஷயத்தில் இந்தியா மௌனம் காக்கிறது. இலங்கை கடற்படையினருடன் சேர்ந்து சீன இராணுவத்தினரும் தமிழக மீனவர்களை தாக்குகின்றனர்.

வடக்கிலும் கிழக்கிலும் அத்துமீறிவுள்ள சீனா,தற்போது இலங்கை உதவியுடன் இராமேஸ்வரத்திலும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. இந்திய அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் உள்ளது. 1983முதல் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுவருகின்றனர். ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துமீறல் செய்துவரும் இலங்கை அரசுக்கு இந்தியா எந்த எச்சரிக்கையும் செய்யவில்லை. தமிழினம் நாதியற்ற இனமாக கிடக்கிறது. தமிழக மீனவர்களையும், ஈழத்தமிழர்களையும் பாதுகாக்க மீண்டும் தமிழீழப்போர் வெடிக்கும், தமிழீழத்திற்கான போர் ஓய்ந்துவிடவில்லை விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் தலைமையில் போர் தொடங்கும்."என்றார் வைகோ.

0 Responses to மீண்டும் தமிழீழவிடுதலைப்போர் தொடங்கும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com