அனுராதபுரத்தில் இடம்பெற்ற சூட்டுச்சம்பவத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அனுராதபுர நகருக்கு அண்மையில் உள்ள தகியாகம பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற இந்த மோதலுக்கு காரணம் தனிப்பட்ட பகை என்று தெரிவிக்கப்படுகின்றபோதும் இரண்டு கட்சி ஆதரவாளர்களுக்கு இடையிலான முறுகல்தான் இந்த மோதலுக்கு காரணம் என்று கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.



0 Responses to அனுராதபுரத்தில் சூட்டுச்சம்பவம்: ஆறு பேர் காயம்!