எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு கொழும்பில் 10 கோடி ரூபா பெறுமதியான காணிகள் உள்ளன என்று பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார். யட்டிநுவர பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது சொத்துவிவரங்களை வெளியிடுபோது பொன்சேகா வெளியிட்ட தனது சொத்துவிவரப்பட்டியலில் இவ்வாறு 10 கோடி ரூபா பெறுமதியான காணி தன்னிடம் இருப்பதாக எந்த தகவலையும் வெளியடவில்லை. தனது வங்கிக்கணக்கில்கூட 6 லட்சத்து 41 ஆயிரத்து 385 ரூபாவே உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோத்தபாய மேலும் தெரிவிக்கையில் -
தற்போது பொன்சேகா பயன்படுத்தும் குண்டுதுளைக்காத பென்ஸ் வாகனம் 4 கோடி ரூபா பெறுமதியானது. ஆனால், அது அவருக்கு 20 லட்சம் ரூபாவுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு அரச செலவில் சகல வசதிகளையும் அனுபவித்து வருபவர் பொன்சேகா. இன்று இவர் அரசுக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
இராணுவதளபதியாக இவர் பதவி வகித்தகாலத்தில் இவருக்கு சேவை நீடிப்பு வழங்கவேண்டாம் என்றும் அது பிற்காலத்தில் அரசுக்கு பயங்கர சிக்கலை ஏற்படுத்தும் என்றும் அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அரச தலைவருக்கு ஆலோசனை கூறியிருந்தார். ஆனால், எமது லட்சியம் விடுதலைப்புலிகளை அழிப்பது என்ற காரணத்தினால் அரச தலைவர் சில விடயங்களில் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளப்படவேண்டியதாகிவிட்டது - என்று கூறினார்.

0 Responses to கொழும்பில் 10 கோடி ரூபா பெறுமதியான காணிகள் பொன்சேகாவுக்கு உள்ளதாக கோத்தபாய தகவல்!