அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்திற்கும் அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்வதற்கு தயாராக இருப்பதாக வெளிநாடுகளிடம் கூறும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், உள்நாட்டில் 13வது திருத்தத்திற்கும் குறைவான அதிகாரங்களை வழங்கி தமிழ் மக்களை ஏமாற்ற முனைகிறது. ஆனாலும், அதற்கு என்றைக்கும் இணங்கப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தின் சில பிரிவுகளை விட்டுக் கொடுப்பதற்கு தயார் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தமை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகமொன்றிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் உறுதியற்ற கருத்துக்களை நம்பி ஏமாறத் தயாரில்லை. அரசாங்கம் குறிப்பிடும் பொலிஸ் அதிகாரத்திற்கு இணங்கவும், ஏற்றுக்கொள்ளவும் மட்டோம். மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்காது. நாட்டில் அதிகாரப் பகிர்வினையும், மாகாண அதிகாரங்களை முழுமையாகக் கொண்டு வருவது மட்டுமே இனப்பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to 13வது திருத்தத்திற்கும் குறைவான அதிகாரங்களை வழங்கி தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது: கூட்டமைப்பு