Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்து அவரை கொழும்புக்கு அழைத்துவந்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அரசியல் பிரமுகர் அலிஸாகிர் மெளலானா ஐந்தரை வருடங்களுக்கு பின்னர் நேற்று நாடு திரும்பினார். அவர் கருணாவுடன் சேர்ந்து எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் மகிந்தவுக்கு ஆதரவாக கிழக்கு மாகாணத்தில் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்று நாடு திரும்பிய மெளலானாவை விமானநிலையத்துக்கு சென்று அழைத்துவந்த கருணா, கிழக்கில் தமது பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டிய வியூகம் குறித்து அவருடன் கலந்துரையாடினார். கிழக்கு மகாணத்தில் செல்வாக்குடனிருந்த மெளலானா கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்த பின்னர் தனது உயிருக்கு ஆபத்து என்று தெரிவித்து அமெரிக்கா சென்றிருந்தார்.

அங்கு சிறிலங்காவுக்கான தூதரகத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர்களில் ஒருவராக அரசதலைவர் மகிந்தவால் நியமிக்கப்பட்டிருந்தார்.

நாடு திரும்பிய மெளலானா பேசுகையில் - மட்டக்களப்பு ஏறாவூரை சொந்த இடமாக கொண்ட நான் எனது மாவட்டத்தில் மகிந்தவுக்கு ஆதரவாக முழு அளவில் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளேன். எனது அரசியல் மீள்பிரவேசத்தை மக்கள் விரும்பியுள்ளனர் - என்றார்.


0 Responses to கருணா(ய்)வுக்கு அடைக்கலம் கொடுத்த அலிஸாகிர் மகிந்தவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நாடு திரும்பினார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com