Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத் தமிழர்களுக்கு இலவச கல்வி

பதிந்தவர்: தம்பியன் 19 December 2009

முகாமில் வாழும் தமிழ் அகதிகளுக்கு, சென்னைப் பல்கலைக் கழகம் சார்பில், இலவச கல்வி வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என சென்னைப் பல்கலைக் கழக துணை வேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் திருவாசகம்,

கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டிற்காகவும், ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்வதை இளம் வயதிலேயே ஊக்கப்படுத்தும் விதத்திலும் .எல்.முதலியார் அடிப்படை அறிவியல் வளர்ச்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் இயக்குனராக, சென்னை பல்கலைக் கழகத்தின் பயோ டெக்னாலஜி துறையின் தலைவர் தேவராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை, சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக இருந்த பதிவாளர் பதவிக்கு, லயோலா கல்லூரியில் புள்ளியில் துறையில் இணை பேராசிரியராக பணியாற்றும் சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பதவிக்கு, நந்தனம் கலைக் கல்லூரியில் வரலாற்றுப் பிரிவில் இணை பேராசிரியராக பணியாற்றும் லியோ அலெக்சாண்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாணவர்கள் ஆலோசனை மையத்தின் டீனாக, சென்னை பல்கலைக் கழகத்தில் தேசிய நலப்பணித் திட்டத்தில் அதிகாரியாக பணியாற்றும் ராஜா உசைன் நியமிக்கப்பட்டுள்ளார்..எல்.முதலியார் அடிப்படை அறிவியல் வளர்ச்சி மையம் துவக்க விழா வரும் 22ம் தேதி நடக்கிறது. இதில், "நோபல்' பரிசு வென்ற வெங்கட்ராம் ராமகிருஷ்ணன் மையத்தினை துவங்கி வைக்கிறார்.

இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு, அவர்கள் வாழும் இடங்களுக்கே சென்று, பெயர்களை பதிவு செய்து, சென்னை பல்கலைக் கழகத்தின் சார்பில் இலவசக் கல்வி வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசின் அனுமதி பெறப்பட உள்ளது. மாநில மறுவாழ்வு மைய அதிகாரி மணிவண்ணனை தொடர்பு கொண்டும் பேசியுள்ளேன்.

தேர்வு முடிவுகள் வெளியிடும் போது, வெளியிடப்படும் மதிப்பெண் முடிவிற்கும், மறுகூட்டலின் போது வழங்கப்படும் மதிப்பெண் முடிவிற்கும் அதிக வித்தியாசம் இருப்பதால், வினாத்தாள் திருத்தும் பணியை கவனமாக மேற்கொள்ள தேர்வாணையத்தின் தலைவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் என்றார்.

0 Responses to ஈழத் தமிழர்களுக்கு இலவச கல்வி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com