கனடா தழுவி நடைபெறும் வட்டுக்கொட்டைத் தீர்மானம் மீதான வாக்குக்கணிப்பு இன்று காலை 9.00 மணிமுதல் ஆரம்பமாகியுள்ளது. இது இன்று மாலை 9.00 மணிவரை வரை நடைபெறும் சில வாக்களிப்பு நிலையங்களின் முன்பாக காலை 9.00 மணிக்கு முன்பாகவே மக்கள் ஆவலுடன் நீண்ட வரிசையில் நிண்டதை காணக்கூடியதாக இருந்தது.
கனடியத் தமிழ் ஊடகங்கள் மட்டுமல்ல கனடியத் தேசிய ஊடகங்களும் இத்தேர்தலுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டவண்ணமுள்ளன. ஒரு நாட்டின் தேர்தல் நடைபெறுவதுபோல் மிக ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் நடைபெறுவதாக கனடிய ஊடகம் ஒன்று செய்தி தெரிவித்துள்ளது.
உலகில் பரப்பளவில் இரண்டாவது பெரிய நாடாகவும் சனநாயகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடான கனடாவில் தமிழீழத்திற்கு வெளியே ஈழத்தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். தமிழீழத்திற்கு வெளியே ஈழத்தமிழ் மக்களால் நடத்தப்படும் முதலாவது பாரிய தேர்தல் என்பதுடன் அரசியில் எதிர்காலத்துக்கான தேர்தல் என்பதால் சரித்திர முக்கியத்துவம் பெறுகின்றது.
கனடா தழுவி 31 வாக்களிப்பு நிலையங்களில் 62 வாக்களிப்ப மின் இயந்திரங்களினூடாக வாக்குப்பதிவு நடைபெறுகின்றது என தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்காக வயது பால் வேறுபாடின்றி பல நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தேர்ததலை நடத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஊர்ச்சங்கங்கள் விளையாட்டுக் கழகங்கள், இளையோர் அமைப்புகள், துறைசார் வல்லுனர் அமைப்புகள் என பல்வேறு தமிழ் சமூக அமைப்புக்களும் தேர்தலுக்கான பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

மாலை 9.00 மணிவரை வக்களிகக் நேரம் இருந்தபோதும் காலைமுதலே மக்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் வாக்களிப்பில் கலந்துகொள்வதை காணக்கூடியதாக உள்ளது. மிகவும் நவீனத்துவப்படத்தப்பட்ட வாக்களிப்பு இயந்திரங்கள் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது. இந்த இயந்திரம் 6 கணப்பொழுதுக்கு ஒரு வாக்களிப்பு அட்டையை உள்வாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
வாக்களிப்பு முடியும் நேரம் 9.00 மணியிலிருந்தே தேர்தல் முடிவுகள் அறியக் கூடியதாக இருக்கும் என கூறப்படுகின்றது. தேர்தல் முடிவடைந்ததும் ரொறன்ரோ பெரும்பாகத்தில் ஸ்காபுரோவில் அமைந்திருக்கும் பிரபல்யமான டெல்ரா விடுதியில் (2035 Kennedy – Delta Toronto East Hotel) பத்திரிகையாளர் மாநாட்டில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என அறியப்படுகின்றது.
தமிழர்கள் அதிகமாக வாழும் ரொரன்ரோ பெரும் பாகத்தில் மட்டும் 20 வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ளன. மற்றும் மொன்றியல், ஒட்டாவா, வன்கூவர், கல்கரி, எட்மிண்டன், வோட்டலூ, வினிப்பெக், கோன்வல், கலிபக்ஸ் போன்ற கனடாவின் பாரிய நகரங்களிலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ளன.
காலை 9 மணி முதல் மாலை 9 மணிவரை தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்கள் மக்கள் வாக்களிக்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு மேலும் அறிவித்துள்ளது. அத்துடன் வாக்களிக்க வரும்போது மக்கள் கொண்டு வரவேண்டிய அடையாள ஆவணங்கள் குறித்தும் அவ்வமைப்பு மேலும் அறிவித்துள்ளது. அது குறித்த விபரங்களையும், வாக்களிப்பு நிலையங்களின் விபரங்களையும் அவ்வமைப்பின் இணையத்தளம் www.tamilelections.ca இல் நீங்கள் பார்க்கலாம்.
0 Responses to கனடியத் தமிழரின் வாக்குக் கணிப்பு பெரும் உற்சாகத்துடன் ஆரம்பம்