தாயக விடுதலைப் போரின் பேரழிவை தடுத்து நிறுத்தும் பொருட்டு, தங்களையே தகனம் செய்துகொண்ட வீரத்தமிழன் முத்துகுமார் உள்ளிட்ட 19 ஈகியர்களை நினைவுகூரும் நிகழ்வு ஆஸ்திரேலியாவின் மெல்பேணில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 31-01-2010 அன்று மாலை 5 மணிதொடக்கம் 7 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வு St Judes Hall, 49 George St, Scorseby எனும் முகவரியில் நடைபெறவுள்ளதாக இளையோர் அமைப்பு அறிவித்துள்ளது.
தமிழகத்திலும் புலத்து தேசங்களிலும் பல்வேறு இடங்களில் ஈகியர்களை நினைவுகூரும் நிகழ்வு நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.



0 Responses to நாளை மெல்பேணில் முத்துக்குமார் உள்ளிட்ட 19 ஈகியர்களை நினைவுகூரும் நிகழ்வு