கடற்படை அதிகாரியைக் கொலைசெய்த காரணத்தால் செல்லகிரி தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், தெயட்ட கிருல கண்காட்சியில் ஜனாதிபதியைக் கொலைசெய்ய முயற்சி செய்ததால் கிரிதரன் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்களை விடுவிக்க தடைவிதித்துவரும் அரசாங்கம் இப்போது புலி உறுப்பினர்களையே விடுதலை செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ள ரணில் இது ஜனாதிபதிக்கும் கே.பி க்கும் இடையிலான ரகசிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியெனவும் கூறியுள்ளார்.
அதாவது தன்னைத் தவிர வேறு யாருக்காவது வாக்களித்தால் அது பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகும், புலிகளை புத்துயிர்ரூட்டும் என மகிந்த கூறிவருவதும், மகிந்த புலிகளுக்கு ஆதரவாக தற்போது செயல்படுவதாக ரணில் கூறிவருவதும் தேர்தல் நாடகமாக மாறியுள்ளது.
நன்றி: அதிர்வு



0 Responses to காவலிலிருந்த ராம், செல்லகிரி, கிரிதரன் ஆகிய 3 புலிகள் விடுதலை: ரணில்