வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத தீர்மானத்தின் மீதான கருத்துக்கணிப்பானது நேற்று நெதர்லாந்தில் 15 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. காலை 9 மணியிலிருந்து மாலை 8மணிவரை இவ்வாக்கெடுப்பில் நெதர்லாந்தில் வாழும் 80 வீதத்திற்கும் அதிகமான தமிழீழ மக்கள் வாக்களித்திருந்தனர்.இதில் கண்காணிப்பாளர்களாக நெதர்லாந்து அரசுத்தேர்தல்களின் கண்காணிப்பாளர்கள், நெதர்லாந்தின் பூர்வீகக்குடிகளும் கடமையாற்றியிருந்தனர். இங்கு மொத்தமாக 2750 வாக்குகள் பதிவாகியிருந்தன.
இதில் சுதந்திரத்தமிழீழத் தனியரசை ஆதரித்து 2728 வாக்குகளும் தனியரசை எதிர்த்து 9 வாக்குகளும் 13 வாக்குகள் செல்லுபடியற்றவையாகவும் பதிவுசெய்யப்பட்டிருந்தன. எனவே, 99.2 வீதமான இலங்கைத்தமிழ் உறவுகள் சுதந்திரத்தமிழீழத் தனியரசைஅமைப்பதே தமது விருப்பம் என தமது கருத்தை இத் தேர்தலில் பதிவு செய்துள்ளனர்.



0 Responses to 99.2 வீத நெதர்லாந்துவாழ் தமிழ்மக்கள் சுதந்திரத் தமிழீழத்தனியரசிற்கு ஆதரவாக வாக்களிப்பு