Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு மோசடியில் ஈடுபடுவதற்கென தென்னிலங்கையில் இருந்து வன்னிக்கு சிங்களவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல் 9மணியளவில் 20ற்கும் அதிகமான பேரூந்துகளில் இவர்கள் ஓமந்தை வீதி ஊடாக மாங்குளம் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்னளர்.

இவர்கள் நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மக்களின் வாக்கு அட்டைகளைப் பயன்படுத்தி மகிந்தராஜபக்சவிற்கு வாக்களிப்பர் என அவர்களில் ஒருவர் அரசியல்வாதி ஒருவருக்கு இரகசியமாக அறிவித்துள்ளார்.

இவர்களைவிடவும் இன்னும் பல பேரூந்துகளும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு என ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தவிடயம் குறித்து எதிரணி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் ஆயிரக்கணக்கானோருக்கான வாக்காளர் அட்டைகள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to வன்னியில் வாக்குமோசடி செய்ய 20 பேரூந்துகளில் சிங்களவர்கள் வருகை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com