வன்னியில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற அடிச்சுவடு இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் சிங்களப்படைகள் வன்னியில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று தமிழக வழக்கறிஞர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.வேலுப்பிள்ளை அவர்களின் இறுதி வணக்க நிகழ்விற்காக தமிழகத்தில் இந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன் அவர்களுடன் சென்ற வழக்கறிஞர் சந்திரசேகர் இதனை தெரிவித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு நான் கிளிநொச்சியில் தங்கியிருந்து தாய்மண்ணினை பார்த்தேன். எல்லாம் சுத்த தமிழில் பெயர் வைக்கப்பட்டு இருந்தன.
ஆனால் தற்போது பத்து மீற்றருக்கு ஒரு படையினரின் காவலரண் மற்றும் சிறீலங்காப் படைப்பிரிவுகளின் தலைமையகங்கள் நிறைந்த இடமாக கிளிநொச்சியும் அதன் சுற்றுப்புறமும் விளங்குகின்றது. மீண்டும் விடுதலைப்புலிகள் தாக்குவார்கள் என்ற அச்ச உணர்வு கிளிநொச்சியில் உள்ள ஸ்ரீலங்காப்படையினரிடம் காணமுடிகின்றது. இதனால்தான் கிளிநொச்சி முழுமையான ஸ்ரீலங்காப் படையினரின் இடமாக காணப்படுகின்றது.
அங்கு ஒரு இடத்தில் கூட தமிழ்சொற்களை காணமுடியாது. மக்களை தோடி அலைவது போல அங்குள்ள கால்நடைகள் திரிகின்றன. தமிழை கொச்சைப்படுத்தவேண்டும் என்ற நோக்கிலும் தமிழன் அங்கு வாழ்ந்தான் என்ற அடிச்சுவடுகள் இருக்கக்கூடாது என்ற நோக்கத்திலும்தான் சிறீலஙகாப்படையின் ஆக்கிரமிப்பு பிரதேசங்கள் காணப்படுகின்றன.
அதேவேளை தமிழ் மக்களின் நிர்வாக அலகுகள் இருந்ததற்கான அடையாளங்கள் எல்லாம் அழிக்கப்பட்ட நிலையில்தான் கிளிநொச்சி காட்சிஅளிக்கின்றது. இவ்வாறன நிலமைகள் எல்லாம் மாறி நாம் மீண்டும் கிளிநொச்சி செல்லும் போது தமிழிழீழ அரசாங்கம் அங்கு இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் வன்னி மண்ணிணை விட்டுவெளியேறினோம் என்றும் வழக்கறிஞர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.



0 Responses to வன்னியில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற அடிச்சுவடு இருக்கக்கூடாது: சந்திரசேகர்