அன்பான தமிழீழ மக்களே!ஒரு இனத்தின் படுகொலை மட்டும் ஒரு இன அழிப்பல்ல! ஓர் இனத்தைப் பகுதியாகவோ, அடியோடு அழிக்கும் திட்டம் கொண்டதாகும்.
தமிழின அழிப்பின் உச்சம் ஆரம்பமாகி 62 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஒரு இன அழிப்பிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் பேரவையினால் 1948ல் உருவாக்கப்பட்ட சாசனம் பின்வருமாறு கூறுகின்றது.
ஒருதேசிய இனத்தின் அல்லது அதன் குழுமத்தின் உறுப்பினர்களை கொல்வது
ஒரு இனத்திற்கு அல்லது அதன் குழுமத்திற்கு வலிந்தோ திட்டமிட்டும் பாரிய உடல் உளரீதியான இன்னல்களை ஏற்படுத்துவது,விளைவிப்பது.
சொந்த வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றுவதும், அவர்களின் பண்பாட்டு வாழ்வியலின் அடையாளங்களையும், தனித்துவங்களையும் அழித்தல்.
இனத்தின் மத்தியில் குழந்தைகள் பிறக்கா வகையில் (இனவிருத்தியைத் தடுக்கும்) கொடுமைகளையும், கடும்பிர ச்சாரங்களையும் புரிதல்.
இவ்வாறு நீண்டு செல்கின்றது மனிதநேயமும், அதன் காப்புச்சட்டமும்.
ஆனால் தமிழீழ மக்கள் கடந்த 62 வருடங்களுக்கு மேலாக சொல்லெண்ணா துன்பத்தை அனுபவித்து விட்டோம். ஆனால் எமக்கு சிங்கள பேரினவாதத்தாலோ, அன்றி நாம் நேசித்த நம்பிய எமக்கு துரோகமிழைத்த பாரததேசத்தையோ, ஏன் இந்த சர்வதேசத்தாலோ எமக்கு என்ன நீதி கிடைத்தது.
ஆனால் இன்று அதற்கு விடையும், காலமும், எமக்கு சாதகமாகவும், ஐரோப்பிய ரீதியில் கனிந்து வருகின்றது. அதற்கு வலுச்சேர்க்க ஒன்றிணைவோம், குரல் தருவோம்.
சிங்களத்தின் சுதந்திர தினத்தை புறந்தள்ளி பகிஸ்கரிப்போம்
ஒன்றிணையும் காலம்: 04.02.2010 வியாழக்கிழமை
ஒன்றிணையும் நேரம் : பி.பகல். 14.00 மணிக்கு
ஒன்றிணையும் இடம்: ஐரோப்பிய பாரளமன்றம் முன்பாக
தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு



0 Responses to சிங்களத்தின் சுதந்திர தினத்தை புறந்தள்ளி ஐரோப்பிய பாரளமன்றம் முன்பாக ஒன்றிணைவோம்