விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்றும், இதுதான் அவருடைய உடல் என்றும் இலங்கை அரசு சில படங்களையும், வீடியோவையும் வெளியிட்டது. ஆனால் இலங்கை காட்டிய அந்த இறந்த உடலைப் போலவே அச்சு அசலாக இருக்கும் இலங்கை ராணுவ வீரர் ஒருவரின் வீடியோ படம் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு மே 18ம் தேதி நடந்த இறுதிப் போரின்போது பிரபாகரன் தப்பி ஓட முயன்றார். ஆனால் எங்களது ராணுவத்தினர் சுட்டுக் கொன்று விட்டனர் என்று கூறியது இலங்கை அரசு. இதையடுத்து உடல் மீட்கப்பட்டதாக பின்னர் கூறி உடலையும் காட்டியது.
ஆனால் இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது நிச்சயம் பிரபாகரனே இல்லை என்று ஈழ ஆதரவாளர்கள் திட்டவட்டமாக கூறினர். இதுதொடர்பாக இன்னும் சர்ச்சை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
இந்நிலையில் இலங்கை ராணுவத்தின் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஒரு ராணுவ வீரர் சக வீரர்களுடன் நின்று கொண்டிருக்கிறார். அந்த வீரர் அப்படியே அசல், பிரபாகரன் உடல் என்று இலங்கை ராணுவம் வெளியிட்ட உடலின் உருவத்துடன் ஒத்துப் போகிறார்.
இந்த வீடியோவை இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் இணையதளம் ஒன்றில் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்றும், இதுதான் விடுதலைப்புலிகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் என்றும் ஒரு செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வீடியோ காட்சியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நன்றி: நக்கீரன்



0 Responses to பிரபாகரனின் உடல் என இலங்கை அரசால் காட்டப்பட்டவர் இவரா? (படங்கள் இணைப்பு)