தேர்தலில் வெற்றிபெறும் ஒரு சூழ்ச்சியாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு இராணுவ முகாம்கள் மீது எதிர்வரும் 24 ஆம் அல்லது 25 ஆம் திகதியில் தாக்குதல் நடத்த அரசாங்கள் திட்டமிட்டுள்ளது என சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. எதிரணியின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ரகசிய உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்ட பின்னரே மீண்டும் விடுதலைப் புலிகள் உயிர்த்தெழுந்துள்ளதாக சிங்கள மக்களுக்குக் காண்பிக்கும் நோக்கில் இந்த சதித்திட்டம் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் சாதமான நிலைமையை இது ஏற்படுத்தும் என அரசு எதிர்பார்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தச் சதித்திட்டத்துக்கு தற்போது சுவிற்சர்லாந்திலுள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் ஒருவரின் ஆதரவு பெறப்பட்டுள்ளதாகவும், ஆனால் இவ்வாறு மீண்டும் உயிர்த்தெழுந்துள்ள புலிகளால்தான் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என மக்கள் நம்பும்படி கூறுவதற்கு யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அத்துருசிங்க ஒத்துழைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் லண்டன் சென்றிருந்த இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் தலைவரும் மஹிந்தவின் மகனுமான நாமல் ராஜபக்ஷ, சுவிற்சர்லாந்தில் உள்ள குறித்த புலிகளின் தலைவருடன் நீண்டநேரம் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இந்த கலந்துரையாடலுக்கு லண்டனில் உள்ள லைக்கா டெல் என்ற தொலைபேசி நிறுவனத்தை நடத்தி வரும் வர்த்தகர் சபாரட்ணம் என்பவர் இவர்களுகு வழியமைத்துக் கொடுத்துள்ளார் எனவும் அந்த சிங்கள இணையத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நமால் ராஜப்கஷ லண்டன் வருகையின்போது, பல முக்கிய தமிழ வர்த்தகர்களையும், புத்திஜீவிகளையும் சந்தித்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் மேற்குறிப்பிடப்பட்ட சந்திப்புகள் குறித்து எந்தத் தகவல்களையும் சுயாதீனமாக ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை.
நன்றி: அதிர்வு



0 Responses to முல்லைத்தீவு முகாம் மீது தாக்குதல் நடத்த அரசு திட்டமா?