பிரித்தானியாவில் பெருமளவு தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் தமிழ் மக்கள் விடயத்தில் பிரித்தானியா என்றும் அக்கறை கொண்டிருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தெரிவித்துள்ளார். லண்டன் ருற்றிங் நாடாளுமன்ற உறுப்பினரும் போக்குவரத்து அமைச்சருமான சதீக் கானின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஒன்றுகூடலில் வெண்புறா அமைப்பின் பிரதிநிதிகளிடம் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் இந்தக் கருத்தினைக் கூறியிருக்கின்றார்.வன்னியில் சிறைப்பிடிக்கப்பட்டு முகாம்களில் வாடும் தமிழ் மக்கள் பற்றிக் கருத்துரைத்த அமைச்சர், இலங்கை அரசு தமிழ் மக்களை விடுதலை செய்து வருவதாகக் கூற முற்பட்டபோது அது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை எனவும், வெளிநாடுகளை ஏமாற் றவும்,தேர்தலை முன்னிட்டும் சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் நாடகம் எனவும், மக்களை முழுமையாக விடுவிக்கும் உண்மையான எண்ணம் இலங்கை அரசுக்கு இல்லை என்றும் வெண்புறா பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.
பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட தமிழ் மக்களை படையினர் சுட்டுக் கொல்லும் காணொளிக் காட்சி உண்மையானது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசு மீதான போர்க் குற்ற நடவடிக்கை பற்றியும், அதில் பிரித்தானிய அரசின் பங்கு பற்றியும் அமைச்சரிடம் வெண்புறா பிரதிநிதிகள் கேட்டபோது, அது பற்றி தமது அரசு ஆராய்ந்து வருவதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் பற்றி விவாதம் எழுந்த போது தேர்தல் சனநாயக முறையில் நடைபெற வாய்ப்பில்லை என வெண்புறா பிரதிநிதிகளால் பிரித்தானிய அமைச்சருக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. தாயகத்தில் பாரிய பணிகளை ஆற்றி வந்த வெண்புறா அமைப்பு வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் பின்னர் அங்கு பணியாற்ற முடியாத சூழல் எழுந்துள்ளமை பற்றி பிரித்தானிய அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோது, பிரித்தானியாவிலும், தாயகத்திலும் வெண்புறா அமைப்பின் பணிகள் பற்றி தான் கேள்வியுற்றிருப்ப தாகவும், வெகுவிரைவில் தாயகத்தில் பணியாற்றும் நிலை உருவாக தம்மால் இயன்ற அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் மிலிபான்ட் கூறியிருக்கின்றார்.
போர் நடைபெற்ற காலப் பகுதியில் இலங்கை சென்றமைக்கு பிரித்தானிய வெளிவிவ கார அமைச்சர் டேவிட் மிலிபான்டிற்கு நன்றி தெரிவித்த வெண்புறா அமைப்பினர், தமிழ் மக்கள் விடயத்தில் பிரித்தானிய அரசு மேலும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியதன் கடப்பாடு பற்றி வலியுறுத்தியிருக்கின்றார். வெண்புறா அமைப்பின் ஐரோப்பிய பொறுப்பாளர் டாக்டர் என்.எஸ்.மூர்த்தி தலைமையில் வெண்புறா பிரதிநிதிகள் மேற்கொண்ட இந்தச் சந்திப்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்டுடன் போக்கு வரத்து அமைச்சர் சதீக்கான், நாடாளுமன்ற உறுப்பினர் சியோபெயன் மக்டொனா மற் றும் லண்டன் முன்னாள் நகரபிதா கென்லி விங்ஸ்ரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



0 Responses to வெண்புறாவின் பணிகள் மற்றும் சனல்-4 காணொளி பற்றி: பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட்