அரசதலைவர் மகிந்தவின் சிரேஷ்ட சோதிட ஆலோசகராகப் பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த தேவேந்திரராஜா என்பவர் நேற்று முற்பகல் சிறிலங்காவிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அரசதலைவர் மகிந்தவுக்கு மிகவும் நெருக்கமான இந்த சோதிடர் இம்முறை அரசதலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ கட்டாயம் தோல்வியடைவார் என வலியுறுத்தி கூறியதை அடுத்து மகிந்தவின் எதிர்ப்புக்களை சந்தித்துள்ளார்.
அரசதலைவர் மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றிபெறுவார் என தொலைக்காட்சியில் தோன்றி அறிக்கையொன்றை வெளியிடுமாறு பசில் ராஜபக்ஷ, தேவந்திரராஜாவிடம் கோரியிருந்ததுடன் அதனை நிராகரித்த அவர் நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இறுதியில் மேர்வின் சில்வா ஊடாக சோதிடர் சந்திரசிறி பண்டார தொலைக்காட்சியொன்றில் தோன்றியிருந்தார். 10 லட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டே அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.



0 Responses to மகிந்தவின் சிரேஷ்ட சோதிடர் நாட்டை விட்டு தப்பியோட்டம்!