Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொக்கரெல்ல காவல்துறையினரால் நேற்று கைதுசெய்யப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவக் கேர்ணல் சுஜித் ஜயசேகர உள்ளிட்ட இராணுவக் கொமாண்டோ பிரிவின் 20 படையினர் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் கொக்கரெல்ல காவல்துறையினரால், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் நேற்றிரவு கொக்கரெல்ல காவல்துறை நிலையத்திற்குச் சென்ற குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு, இவர்களைக் கைதுசெய்து தமது தலைமையகத்திற்குக் கொண்டுசென்றுள்ளது.

பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் இவர்களைத் தடுத்து வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் சார்பில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவதற்காக கிளிநொச்சி செல்லும் வேளையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to கைது செய்யப்பட்ட கொமாண்டோக்கள் புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com