Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

களனி புளுகஹ சந்தியில் அமைக்கப்பட்டுள்ள சிவாலயத்தில் தேர்தல் தினத்தன்று அதிகாலை விசேட பூஜையொன்றை நடத்த அரசதலைவர் மகிந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக களினி பிரதேச சபைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான ஆரம்பகட்டப் பூஜைகள் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமாகின. இந்தப் பூஜைகளுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் மேர்வின் சில்வா மேற்கொண்டுள்ளார்.

அரசதலைவர் மகிந்தவின் ஆலோசனையின் பேரில் மேர்வின் சில்வாவினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சிவாலயத்திற்கான சிலை இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசதலைவர் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி இந்தியாவின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் நேர்த்திக்கடன் ஒன்றை செலுத்துவதாக வேண்டிக் கொண்டதற்கமையே களனியில் இந்த சிவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இம்முறை தமிழகத்திற்குச் செல்வது ஆபத்தானது என்பதால் அரசதலைவரின் பூஜை வழிபாடுகள் களனி சிவாலயத்திலேயே நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூஜைகளை நடத்துவதற்காக இந்தியாவிலிருந்து பூசகர் ஒருவர் வரவழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி இம்முறை தேர்தலில் வெற்றிபெற்றால் இலங்கையில் மேலும் நான்கு சிவாலயங்களை அமைப்பதாக நேர்ந்துகொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to தேர்தலில் வெற்றிபெற்றால் நான்கு சிவாலயங்கள் கட்டுவதாக மகிந்த நேர்த்திக்கடன்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com