Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தம்மை விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என கூறி சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்களான நாகமணி மற்றும் சச்சிதானந்தன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் வானையும் முற்றாக சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கினால் குடும்பத்துடன் கொலை செய்யப்போவதாகவும் அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர். சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மேஜரான ரி.எம்.கே.பி.ரி. பண்டார தலைமையிலான குழுவினரே இவ்வாறு விடுதலைப் புலிகள் எனக் கூறி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மேஜர் பண்டார வடமாகாணக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த அத்துருசிங்கவின் கீழ் பணியாற்றி வருகிறார்.

வடபகுதியில் வாக்குக் கொள்ளையில் ஈடுபடுவதற்கான வன்முறைகளைத் தூண்டும் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் வடமாகாணக் கட்டளைத் தளபதிக்கும், முன்னாள் காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோவிற்கும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to தம்மை விடுதலைப்புலிகள் என்று கூறி திருகோணமலையில் இராணுவ புலனாய்வு பிரிவினர் தாக்குதல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com