Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் பிறந்த மண்ணை நாம் வளர்ந்த மண்ணை நாங்கள் நேசிக்கின்ற எங்கள் தாய் மண்ணை ஆக்கிரமித்து எம் மக்களை அடிமைப்படுத்தி அராஜகம் புரிகின்ற சிங்களஅரசை தமிழீழ மக்கள் எதிர்க்கின்றனர், அடியோடு வெறுக்கின்றனர் என்பதை உலகறிய எம்மினத்தால் நடாத்தப்படும் அரசியல் போராட்டத்தில் கலந்துகொண்டு மாவீரர்களின் தியாகத்தை இதயத்தில் இருத்தி அவர்கள் சிந்திய இரத்தத்திற்கு மதிப்பளித்து அவர்கள் கனவை நினைவாக்குவதே தமிழ்மக்களாகிய எம் தலையாய கடமை என உறுதியெடுத்து கடும் குளிரையும் கொட்டும் பனிமழையையும் பொருட்படுத்தாது வந்து வாக்களித்த அனைத்து யேர்மனி, நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து வாழ் தமிழீழ மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த தேர்தல் குழுவினருக்கும் எமது இரு கரம் கூப்பிய நன்றிகளையும் வெற்றி வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.

யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்.

யேர்மனி.

மின்னஞ்சல்: german-tamil-eluththaalar-sankam@hotmail.com

0 Responses to யேர்மனி, நெதர்லாந்து, சுவீற்சலாந்து வாழ் தமிழீழ உறவுகளுக்கு - யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com