சிறீலங்காவின் அரசுத்தலைவர் தேர்தல் வாக்குப் பதிவு நடந்து வருகிறது. இலங்கையின் 6வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.இந்த தேர்தலில் ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். வாக்குப் பதிவுக்காக 11,098 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 888 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். நாளை காலை முழுமையாக எண்ணப்பட்டு முடிவுகள் தெரியவரும். இருப்பினும் இன்று நள்ளிரவு வாக்கில் முன்னணி நிலவரம் தெரியவரும்.



0 Responses to சிறீலங்காவின் அரசுத்தலைவர் தேர்தல் வாக்குப் பதிவுகள் நடந்து வருகிறது