கொழும்பில் இன்று காலை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற 4 நாட்களே இருக்கு ம் நிலையில், அங்கு குண்டு வெடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிபர் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகாவின் பிரசார மேலாளர் திரான் ஆலன்ஸ் வீட்டை குறிவைத்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. குண்டு வெடிப்பில் திரான் ஆலன்சின் வீடு முற்றிலுமாக எரிந்தது. சம்பவ இடத்தில் இருந்த பாதுகாவலர், வேனில் வந்த சில மர்ம ஆசாமிகள் வீட்டை நோக்கி குண்டை வீசிவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் ராஜபட்சே, சரத் பொன்சேகா ஆதரவாளர்களுக்கு இடையேயான மோதலால் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் சரத் பொன்சேகாவின் பிரசார மேலாளர் திரான் ஆலன்ஸ் வீட்டை குறிவைத்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: நக்கீரன்



0 Responses to கொழும்பில் குண்டு வெடிப்பு: தேர்தல் நேரத்தில் பரபரப்பு