இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நேற்று (22) நள்ளிரவு பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்செகாவின் தேர்தல் அலுவலகங்கள் ஆறு அரச ஆதரவாளர்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
கம்பகா மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் அலுவலகங்களில் இருந்த பொன்சேகாவின் ஆதரவாளர்களை தாக்கி விரட்டிய ஆயுத குழுவினர், அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
மகாரா பகுதியில் உள்ள கல்வெல சந்தி, பியகம பகுதியில் உள்ள மஹாபிம், மகோல, கல்வெல சந்தி, பமுனிவெல, மல்வன்ன சந்தி ஆகிய பகுதிகளில் இருந்த அலுவலகங்களே சேதமாக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் காவல் நிலையத்திலும், தேர்தல் ஆணையாளரிடமும் நாம் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



0 Responses to பொன்சேகாவின் ஆறு தேர்தல் அலுவலகங்கள் தாக்கி அழிப்பு