Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னியில் நிலைகொண்டுள்ள சிறீலங்காப்படையினர் தமது நிலைகளை பலப்படுத்தும் செயற்பாடுகளின் ஈடுபட்டுள்ளார்கள்.

வதைமுகாம்களில் உள்ள மக்களை மீள்குடியேற்றம் என்றபெயரில் சிறீலங்காப்படையினரின் முகாம்களுக்கு அருகில் சிறீலங்கா அரசு குடியமர்த்தியுள்ளது இன்னிலையில்வன்னியில் வீதிகள்எங்கும் நிலையான காவலரண்கள் அமைக்கப்பட்டு படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவம்,இதில் குறிப்பாக தமிழ்மக்கள் வாழ்இடங்களிற்கு அண்மைய பகுதிகளில் புதிதான காவலரண்கள் அமைக்பம் பணிகளில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளதாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் கிளிநொச்சி பூனகரி பகுதியிலும் முல்லைத்தீவின் மேற்கு பகுதிகளிலும் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளிலும் சிறீலங்காப்படையினர் புதிய காவலரண்கள் அமைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் தமிழ்மக்கள் வாழ்இடங்களில் கடத்தல் மர்மகொலைகள் நடந்தேறியுள்ள நிலையில் தமிழ்மக்கள் வாழ் இடங்களில் கடமைகளில் உள்ள சிறீலங்காப்படையினர் மாற்றப்பட்டு புதிய படையினர் நிலைகொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்டப்டுள்ளது.

0 Responses to சிறீலங்காப்படையினர் வன்னியில் தமது நிலைகளைப் பலப்படுத்தி வருகின்றனர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com