Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

என்னை கொலை செய்ய சதி: எம்.பி

பதிந்தவர்: தம்பியன் 02 February 2010

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் என்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான இரா. சம்பந்தன் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அவர் மேலும், அதிபர் தேர்தலுக்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் என்னையும் எங்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மேலும் சில எம்.பி.,க்களையும் கொல்ல சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் இந்த கொலைச் சதியை செயல்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன.

0 Responses to என்னை கொலை செய்ய சதி: எம்.பி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com